Wednesday, November 30, 2011

மொழி அறிவோம்.!!



தேவலை..??? தாழ்விலை..???


தேவலை -- நம் எல்லோருக்கும் இந்த வார்த்தை பரிச்சயம் உண்டு.

உடல்நிலை சரியில்லாமல் போனவர்களை நலம் விசாரிக்கும் போது "எப்படி இருக்கீங்க?" என்று கேட்டால்,
"முந்திக்கு இப்ப கொஞ்சம் தேவலை" என்று பதில் வருவதுண்டு. சில கிராமங்களில் "தாவலை" என்ற சொல்லும் வழக்கில் உண்டு..

ஆனால் "தேவலை" இந்த பயன்பாட்டுச் சொல் ஒரு சரியான சொல் இல்லை.
இதன் உண்மையான வார்த்தை "தாழ்விலை"

தாழ்விலை என்றால் தாழ்வு இல்லை என்று பொருள்படுகிறது. ஆகையால் இனிமேல் இந்த சொல்லையே நாமும் பயன்படுத்தத் துவங்குவோம். முதலில் சற்று வித்தியாசமாய்த் தான் உணர்வீர்கள். ஆனால் இந்தச் சொல்லையே பயன்படுத்தத் துவங்கி விட்டால் பின்னர் அது நமக்கு எளிதாகி விடும்.

தயவு செய்து உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இந்த வார்த்தையை அறிமுகப்படுத்துங்கள். பேசும் போதும், எழுதும் போதும் இந்த வார்த்தையையே இனி பின்பற்றுவோம்.

No comments:

Post a Comment