Thursday, December 29, 2011

மனதைக் கவர்ந்த பாடல்கள் - 2011


அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் புது வருடம் இன்னும் இரு தினங்களில் ஆரம்பிக்கப் போகிறது. இந்த நேரத்தில் கடந்த வருடத்தை ஒரு மீள்பார்வை செய்வது நமக்கு வழக்கமான ஒன்றே..

அந்த வகையில் நான் 2011-ம் வருடம் வெளியான படங்களில் இருந்து என் மனதைக் கவர்ந்த சில பாடல்களை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். நீங்களும் என்னுடன் சேர்ந்து இந்தப் பாடல்களைக் கேட்டு மகிழ்வீராக..!!

இதுவே உங்களுக்கான என் புத்தாண்டு வாழ்த்து மற்றும் பரிசு..!! :-)


முதலில் நம் எல்லோருக்கும் விருப்பமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய பாடல். இந்தப் பாடல் அநேகமாக அனைவருக்கும் பிடித்ததே.. அது தவிர இதில்  எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரணும் இணைந்து சில வரிகள் பாடியிருப்பார். இவரது குரல் தந்தையின் குரலை பெரும்பாலும் ஒத்திருக்கும். எஸ்.பி.பி.சரண் “அலைபாயுதே” படத்தில் பாடிய “காதல் சடுகுடு” பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.  ஆனால் இவருக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காதது என்னுடைய தனிப்பட்ட வருத்தம்.

இப்போது: “அய்யய்யோ நெஞ்சு அலையுதடி”



அடுத்து புதிய முயற்சியைப் பாராட்டும் விதமாக "எங்கேயும் எப்போதும்" படத்திலிருந்து பெரும்பாலானோரின் இஷ்ட தெய்வமான "கோவிந்தா, கோவிந்தா" பாடல்.. :-)

இந்தப் பாடல் முழுவதுமே முதலில் தொடங்கும் இசையில் இருந்து, வரிகளும் மற்றும் காட்சி அமைப்புகளும் சரி ஒரு தனிப்பட்ட சிந்தனை. 
அதில் நான் கேட்டு ரசித்தது "இவள் வந்த போது வந்த கோபம் இப்போ இல்லையடா..இவள் சேர்த்து வைத்த சந்தேகங்கள் 202-tum times times" ;)



அடுத்த பாடல் சாந்தனு மற்றும் சந்தானம் நடித்த "கண்டேன்" படத்திலிருந்து.. நிறைய பேருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆனால் இதில் உள்ள சில பாடல்கள் அருமை. அதில் ஒன்று "உனைக் கண்டேனே..எனைத் தந்தேனே" எனத் தொடங்கும் பாடல். இதில் மலேசியா-வைச் சேர்ந்த தமிழர் ஒருவர் ஹிப்-ஹாப் ரகமான ஒரு பல்லவி பாடுவதும் அருமை..



அடுத்து காதலர்கள் அனைவருக்கும் பிடித்த, ஜீவா நடித்த "கோ" படத்திலிருந்து "என்னமோ ஏதோ" பாடல். மதன் கார்க்கி எழுதிய இந்தப் பாடலில் வரும் "குவியமில்லா" "காட்சிப் பேழை" போன்ற வார்த்தைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

எனக்கு மிகவும் பிடித்த வரி "சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்".



அடுத்த பாடல் பெரும்பாலான கானா ரசிகர்களையும், குழந்தைகளையும் கவர்ந்த, "வானம்" படத்தில் சிம்பு பாடிய "No Money, No Honey" பாடல். பல திறமைகளைக் கொண்ட சிம்பு-வின் பாடலுக்கு எப்போதும் நான் ஒரு ரசிகன் ;)



அடுத்த பாடலும் ஒரு கானா பாடல் தான். இந்தப் பாடல் பிரபு நேபால்-இன் "மைனா" படத்திலிருந்து "ஜிங்கு ஜிக்கா" பாடல். ஒரு நாட்டுப்புறப் பாடலின் சாயலில் பாடப்பட்ட பாடல் என்பதால் தமிழ்நாட்டில் அதிகமாக ஒலிக்கப்பட்ட ஒரு பாடல்.


    

அடுத்து ஒரு இனிய கீதம். "எங்கேயும் காதல்" படத்தில் இருந்து "நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ".. காதலர்கள் அனைவரையும் கவர்ந்த பாடல். வரிகளும், இசையும் இனிமை, அருமை.

    


அடுத்த பாடலும் "எங்கேயும் காதல்" படத்திலிருந்து.. "தீ இல்லை, புகை இல்லை, ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே" பாடல். இந்த பாடலின் தொடக்க இசை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இசையும், வரிகளும் அருமை, இனிமை..




அடுத்து ஒலிக்க இருப்பது "180 " படத்தில் மதன் கார்க்கி எழுதிய "நீ கோரினால் வானம் மாறாதா" எனத் தொடங்கும் பாடல். இந்த படமே ஒரு வண்ணமயமான படம். தெலுங்கு படங்களான "நுவ்வு ஒஸ்தானண்டே நேநு ஒத்தண்டானா” “பொம்மரிலு” படங்கள் மூலமாகப் பிடித்துப் போன ஒரு நடிகர் சித்தார்த். நாயகி பிரியா ஆனந்த் பார்த்தவுடன் பிடித்துப் போகும் ஒரு முகம், அது மட்டுமில்லாமல் Cadbury's dairy milk chocloate விளம்பரம் மூலம் பரிச்சயம் ஆனவர். இதில் அவரது உடைத் தேர்வுகள் அழகு. சித்தார்த்தின் உடைத் தேர்வுகளும் அழகு. (பீட்டர் இங்கிலாந்த் என்று நினைக்கிறேன்) :-)

நநநானா நநந நநானா என்று இந்தப் பாடல் தொடங்குவது அருமை. வழக்கமான பாடல்கள் போல் ஒரே பல்லவியை நாயகன் ஒரு முறை, நாயகி ஒரு முறை பாடுவது போல் இல்லாமல் சற்று வித்தியாசமாய் சரணத்தை நாயகி மெதுவாகப் பாடுவார், நாயகன் அதை கொஞ்சம் வேகமாக மேற்கத்திய இசை பாணியில் பாடுவார். மற்றொரு அம்சம் இது பெண்களுக்கு மிகவும் பிடித்த பாடல். ஏனெனில் இதில் சித்தார்த், பிரியா ஆனந்திற்கு நிறைய பரிசுப் பொருள்கள் தருவார் ;-) 



இப்போது "மௌனகுரு" அருள்நிதி நடித்து வெளிவந்த ஒரு சிலிர்ப்பூட்டும் படம். அருள்நிதிக்கு தமிழ்நாட்டின் தெற்கு மாவட்ட மக்களின் முக அமைப்பு. இதனால் "வம்சம்" படம் மூலமாகவே இவரைப் பிடித்து விட்டது. இவரின் நடிப்பும் ஒரு இயல்பான ஒன்று. இவர் பேசுவது சில சமயம் குழந்தை போல் கெஞ்சி கெஞ்சி பேசுவது போல் இருக்கும் :) "மௌனகுரு" படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் மட்டுமே. மூன்றுமே நல்ல பாடல்கள். அதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் "என்ன இது என்ன இது தொல்லை". நாயகி "இனியா" 'வாகை சூட வா' படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர்.




அடுத்து "வாகை சூட வா". இதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் "போறானே போறானே, காத்தோடு தூத்தலப் போல போறானே" பாடல். வட்டார மொழிகள் பெரும்பாலும் தமிழ்ப் பாடல்களில் பயன்படுத்தப் படுவதில்லை என்பது என் கருத்து. இந்தப் பாடலில் வரும் "தூத்தல்' என்ற வார்த்தைக்காகவே எனக்குப் பிடித்து போயிற்று. இந்தப் பாடல் காட்சியாக்கப்பட்ட விதமும் நன்றாக இருக்கும். 

இந்தப் பாடலின் HD காணொளி கிடைக்கவில்லை. கீழிருக்கும் காணொளியின் தரம் பரவாயில்லை ரகம் தான். :-(




அடுத்து "ரௌத்திரம்" படத்திலிருந்து மனதை வருடிச் செல்லும் "மாலை மங்கும் நேரம், ஒரு மோகம் கண்ணின் ஓரம்" பாடல். முதல் முறையாக ஸ்ரையாவின் கவர்ச்சி காமத்தைத் தூண்டாமல் கணவன்-மனைவி இடையே ஒரு அன்யோன்யத்தை உருவாக்கும்படியாக இருக்கும் பாடல் :) மற்றபடி ஒரு மிருதுவான வருடிச் செல்லும் பாடல் வரிகள்.




அடுத்து "குள்ளநரிக் கூட்டம்' படத்திலிருந்து "விழிகளிலே விழிகளிலே" பாடல். அருமையான பாடல் வரிகள் மற்றும் இதமான இசை இந்தப் பாடலின் சிறப்பு. மற்றொரு சிறப்பு படம் மதுரையில் எடுக்கப்பட்டது. :) நாயகி ரம்யா நம்பீசனின் சுடிதார் தேர்வுகள் அருமை.




அடுத்து சிம்பு பாடிய ஒரு மேற்கத்திய பாணியிலான பாடல். "மம்பட்டியான்" படத்திலிருந்து "காட்டு வழி போற பொண்ணே கவலைப்படாதே" பாடல். சிம்பு-வின் குரல் தான் இந்தப் பாடல் எனக்குப் பிடித்துப் போன ஒரே காரணம்.




அடுத்து "ஆடுகளம்" படத்திலிருந்து "ஒத்த சொல்லால என் உசுரெடுத்து வச்சிக்கிட்டா" பாடல். ஆட்டம் போடவைக்கும் இசை, குரல் மற்றும் காட்சி அமைப்பு இந்தப் பாடலின் வெற்றி. பாடல் வரிகள் மிகவும் இயல்பாக இருப்பது இன்னொரு அம்சம். இணையதளத்தில் இந்தப் பாடலுக்கு சில வெள்ளைக்காரர்கள் நடனமாடும் காணொளி கூட வெளியானது இந்தப் பாடலின் தாக்கம் எந்த அளவு என்று தெரிந்து கொள்ளலாம்.





அடுத்து சிம்பு-வின் "ஒஸ்தி" படத்திலிருந்து ஒரு பாடல். சமீபத்தில் இசையமைப்பாளர் 'தமன்' நன்றாக இசையமைக்கிறார். இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களும் எனக்குப் பிடித்த ஒன்று. அதில் முதலில் வெளியான "கலாசலா" பாடல். எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் மல்லிகா ஷெராவத் இந்தப் பாடலின் சிறப்பம்சம். சிம்பு இந்தப்பாடலில் வரும் போது ஒலிக்கும் டி.ஆர். குரல் சிம்புவுக்கு ஒரு கெத்து கொடுக்கும் ;) 

இந்தப் பாடல் வெளியான போது "ஜர்தா பீடா" என்ற வார்த்தை "பாம்பே அல்வா" என்று மாற்றப்பட்டது நல்லது தான். இல்லையென்றால் நம் வீட்டுக் குழந்தைகள் அதைப் பாடுவது மட்டுமில்லாமல் அது என்னவென்று வாங்கிப்பார்க்கவும் ஆசைப்பட்டிருப்பார்கள். 



அடுத்து விஜய் நடித்த 'காவலன்' படத்திலிருந்து "யார் அது, யார் அது" பாடல். மிக நீண்ட இடைவளிக்குப் பிறகு விஜய்-யின் நடிப்பில் ஒரு நல்ல படம். இந்தப் பாடலும், விஜய்-யும் அழகு. :) மற்ற படங்களைக் காட்டிலும் இதில் விஜய்-யின் உடைத் தேர்வுகள் பொருத்தமாய் இருக்கும்.




ஆங்கிலத்தில் "Last But Not Least" என்பார்கள். அது போல் இந்தப் பதிவை நிறைவு செய்யும் விதமாக "தல அஜித்"-இன் "மங்காத்தா" படத்திலிருந்து "மச்சி..Open the Bottle" பாடல். யுவனின் இளமை துள்ளும் இசை. பொதுவாக அஜித்-தின் நடனம் நன்றாக அமையாது அனால் இதில் அஜித்-தின் நடனம் ரசிக்கும்படியாக இருக்கும். அஜித்-தின் சிறப்பியல்பு{style} அழகு.  இந்தப் பாடலின் தொடக்கப் பல்லவிக்கும், முதல் சரணத்திற்கும் இடையில் வரும் இசையும், அஜித்-தின் நடனமும் அருமை.





எல்லோருக்கும் போலவே கேட்டதும் பிடித்துப் போன சில பாடல்கள் எடுக்கப்பட்ட விதத்தில் நமக்கு ஏமாற்றத்தைத் தரும். அதே போல் எனக்கும் கேட்கப் பிடித்து அப்புறம் காட்சிகளைப் பார்த்து ஏமாற்றம் அளித்தவை சில:

"மயக்கம் என்ன" படத்தின் பாடல்கள் மற்றும் "ஏழாம் அறிவு" படப் பாடல்கள்.


நண்பர்களே, என்னுடைய பாடல் தேர்வுகள் நிச்சயம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என்றே நம்புகிறேன். ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை என்பதால் இந்தப் பாடல்கள் எதையும் வரிசைபடுத்தவில்லை. மனதில் தோன்றிய பாடல்களை ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்தேன். இதில் உங்களுக்குப் பிடித்த பாடல் ஒன்றிரண்டு விடுபட்டிருந்தால் மன்னிக்கவும். 

Wednesday, December 21, 2011

A great Innovation to convert Plastic into Oil.!!


Hello Friends,

Today I got a nice topic to share with you all.

Did we ever think that we can change the plastic into oil which we can use it to run our car, bike, generator and prepare gasoline to use in stoves. If it is possible we would say "Amazingggggg.!!" right..?!?!?!

A Japan company named "Blest" created a machine that turns several types of plastics into oil. That machine burns the plastic put into it and send the gas created by burning the plastic to a small container filled with normal tap water to turns the gas into Oil.


Typically made from petroleum, it is estimated that 7% of the world’s annual oil production is used to produce and manufacture plastic. That is more than the oil consumed by the entire African continent.
Plastic’s carbon footprint includes landfilling and incineration, since sadly, its recycle rate is dismally low around the globe.
Plastic trash is also polluting our oceans and washing up on beaches around the world. Tons of plastic from the US and Japan are floating in the Pacific Ocean, killing mammals and birds. Perhaps this tragedy is best captured in the TED presentation by Capt. Charles Moore of the Algalita Marine Research Foundation.
There is a video released in youtube regarding this and it generated much interest among many people around the world. The video starts with the title Ourworld 2.0. It will be true if all the countries are started recycling plastic garbage into oil. The pollution will really be reduced to a large amount. If this will be implemented we will be getting fuel and gas in less price.

“If we burn the plastic, we generate toxins and a large amount of CO2. If we convert it into oil, we save CO2 and at the same time increase people’s awareness about the value of plastic garbage,” says
 Akinori Ito, CEO of Blest 


After knowing that plastic can be converted into Oil, all people will start collecting the plastics instead throwing it away. This is a must followed procedure for every country in the world. Hope this would come to real very soon.

Once you see the below video, I know you would scream Wowwwwww.!!!




Thanks for visiting. Please leave your valuable comments.

Tuesday, December 20, 2011

வருங்காலத் தொழில்நுட்பம்: புதுமை செய்யும் ஆற்றலுக்குரிய ஐந்து திறமைகள் என்ன?


ன்னொரு புதிய கல்வியாண்டு தொடங்கிவிட்டது. தொழில்நுட்பப் படிப்புகளின் மீதுள்ள ஆர்வம் தொடர்ந்தபடியேதான் இருக்கிறது. கடந்த சில வாரங்களாக இந்தியா வில் இருக்கையில், தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் சிலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் சேரப்போகும் சோனேஷின் பெற்றோர்கள் இருவரும் டாக்டர்கள் என்றாலும், சோனேஷின் விருப்பம் தொழில்நுட்பம். கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் சேர்ந்திருக்கும் ரோஷனின் அப்பா பஸ் கண்டக்டர்,  அம்மா ஆரம்பப் பள்ளி ஆசிரியை. ஒவ்வொருவருக்கும் பலவிதக் கனவுகள். 10 வருடங்களுக்கு முன் தொழில்நுட்பம் கற்றால் ஏதோ ஒரு நிறுவனத்தில் வசதியாக வேலை கிடைக்கும் என்பது மட்டுமே உந்துகோலாக இருந்தது. இணையமும், அலைபேசித் தொழில்நுட்பங்களும், மாறி வரும் உலகச் சூழலும் தொழில்முனைதல் (entre preneurism) மற்றும் புதுமை செய்தல் (inno vation) போன்றவை அத்தனை கடினம் அல்ல என்ற நிலையைக் கொண்டுவருவது தெளிவாகப் பார்க்க முடிகிறது.



அடுத்த ஸ்டீவ் ஜாப்ஸ் (Apple) போலவோ, லேரி பேஜ் (Google) போலவோ மார்க் ஸக்கர்பெர்க் (Facebook) போலவோ வருவதற்கான வாய்ப்புகள் என்ன?
வெற்றிகரமான Innovator ஆவதற்குப் பிறப்பிலேயே திறமை இருக்க வேண்டுமா? அதெல்லாம் தேவை இல்லை என்கிறார்கள் 'The innovators DNA: Mastering the five skills of disruptive innovators’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள். பிரச்னைகளைத் தீர்க்கும் திறன் (Problem Solving Skills), தீவிரப் பயிற்சியோடு (Practice) இணையும்போது புதுமை செய்யும் ஆற்றல் வந்துவிடுகிறது. இதற்கு ஜீன்ஸ் தேவை இல்லை என்பதுதான் புத்தகத்தின் அடிப்படை.

அந்த ஐந்து திறமைகள் என்ன? பார்க்கலாம்.

கேள்வி கேட்டுக்கொண்டே கேளுங்கள்!
குறிப்பாக, 'What if’ வகை கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருங்கள். பயனீட்டா ளர்கள் உங்களது பொருளுக்குக் குறைந்த விலையே கொடுக்கத் தயாராக இருந்தால், அதை எப்படி வடிவமைப்பீர்கள்? அவர் களுக்குப் பணம் ஒரு பொருட்டாகஇல்லை என்றால், உங்கள் வடிவமைப்பு எப்படி மாறும்? நீங்கள் உங்கள் பொருளை/தீர்வை வெளியிடும் முன், இன்னொரு போட்டி யாளர் வெளியிட்டால் என்ன செய்வீர்கள்? என்ற ரீதியில் கேட்டுக்கொண்டே இருங்கள். மற்றவர்களிடம் அல்ல... உங்களிடம் நீங்களே!

மற்றவர்கள் பார்க்காதவற்றை உற்று நோக்குங்கள்!
இருக்கும் இடங்களில் உள்ளவற்றை வெறுமனே பார்க்காதீர்கள் அவற்றை உற்றுநோக்கி, உள்வாங்கிக்கொண்டு மனதில் அலசுங்கள். இந்தத் திறனை வளர்க்க அடிக்கடி புதிய இடங்களுக்குப் பயணம் செய்வது உதவும். தெரியாத புதிய இடங்களுக்குச் செல்லும்போது, அங்கு இருப்பவர்கள் அந்தச் சூழலைப் பார்ப்பதைவிட, நீங்கள் கூர்மையாக உற்றுநோக்குவீர்கள். நாளடைவில், அது உள்ளார்ந்த திறனாகவே மாறிவிடும்!

சரியான நட்பு வட்டத்தில் ஈடுபடுங்கள்!
பொதுவாக, மக்களின் மனோநிலை அவர்களைப் போன்றவர்களுடன் நட்பு வட்டத்தில் இணைவதுதான்- Birds of the same feather fly together - ஆனால், புதுமை செய்ய விரும்பும் தொழில்முனைவோர், தமது சமூக வட்டத்தைத் தாண்டி புதிய network ஐ வளர்த்துக்கொள்வது மிகமிக அவசியம். அப்போதுதான் உங்களது எண்ணங்கள் விசாலமாகும். அது புதுமைக்கு இழுத்துச் செல்லும்!

பரிசோதனை மூலம் கற்றுக்கொள்ள பயப்பட வேண்டாம்!
விர்ஜின் நிறுவனத்தின் ரிச்சர்ட் ப்ரான்சன் இதற்கு நல்ல உதாரணம். ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத, கிட்டத்தட்ட 300 நிறுவனங்களை நடத்துகிறார் இவர். என்ன துறையில் பிசினஸ் தொடங்க வேண்டும் என்றாலும், இவர் தயார். லாபமாக நடந்தால் தொடர்ந்து நடத்துவார். நஷ்டம் அடைந்தால், மூடிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்.
இந்த நான்கு திறமைகளையும் பயிற்சி செய்தபடியே இருந்தால், ஐந்தாவது தானாகவே வந்துவிடும். அது...

Associational Thinking!
சம்பந்தம் இல்லாத பல பிரச்னைகளையும் அவற்றைத் தீர்ப்பதற்கான ஐடியாக் களையும் ஒருங்கிணைத்துச் சிந்திக்க முடிகிற திறன் என்று இதைச் சொல்லலாம். வெற்றிகரமாகப் புதுமைகளைச் செயல் படுத்தும் தொழில்முனைபவர்களிடம் இந்தத் திறன் இருப்பது தெரியவரும் என்கிறார்கள் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள்.

'சிங்களத் தீவினுக்கோர்
பாலமமைப்போம்
சேதுவை மேடுறுத்தி
வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடி வரும்
நீரின் மிகையால்




மையத்து நாடுகளில் பயிர்
செய்குவோம்!’

என்றெல்லாம் பிரமாண்ட கட்டுமானத் தொழில்நுட்பக் கனவுகளை மட்டுமே ஒரு காலத்தில் காண முடிந்தது. இந்தியா போன்ற வளரும் பொருளாதாரச் சமூகத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள். ஒவ்வொரு பிரச்னையின் தீர்வும் புதுமை செய்வதற்கான வாய்ப்பு. இந்தக் கட்டுரையின் தாக்கத்தினால் 'யாரிடமாவது வேலைக்குப் போவதைவிட, கம்பெனி ஒன்று தொடங்கப் போகிறேன்!’  என்று ஒரு மாணவராவது முடிவு செய்தால், அதை இந்தக் கட்டுரைத் தொடரின் மிகப் பெரிய வெற்றியாகக் கருதுவேன்!



உபயம்: ஆனந்த விகடன் 


Thursday, December 8, 2011

A Request to KERALA PEOPLE – From Tamilnadu Chief Minister J.Jeyalalitha.





A Request to KERALA PEOPLE – From Tamilnadu Chief Minister J.Jeyalalitha.


“There are many tamil people live in kerala and more than that there are many malayalam people live in Tamilnadu also. I request the wise malayalees not to become a victim of the politicians who are making conspiracy and using the poor people for their own political gains” – Said Tamilnadu Chief Minister J.Jeyalalitha. 

TN Chief minister J.Jeyalalitha’s Statement:

“We received the news that the Sabarimala Pilgrims from tamilnadu were attacked by their Kerala brothers and the vehicles with the TN registration were also attacked by few people. Also, the tamil people who do business in kerala, the tamil journalists and industrialists from tamilnadu live in kerala were attacked due to the “Mullai Periyar Dam issue”. I request the ‘wise malayalam people’ who are living in the god’s own country not to believe the narrow-minded anti-socialists’ statement on the Mullai Periyar dam issue.

According to me, This issue has been brought to a critical situation due to the personal gain of few people live in kerala. In such situations it is natural that the people lose their temper and vent out the anger. It is the big responsibility and duty of the politicians/officials to explain the truth to the people and make them understand.

There is no definite proof that the Mullai Periyar dam is not safe and there’s no real threat that the dam will break and bring the life of people live in that area to a crisis. The Dam’s safety measurements are very well taken care of the experts in the related field and the commission deployed by the supreme court also agreed that. 


We do not need to suspect or worry that the dam’s age is 116 years so that it is not safe. “Kallanai” which was built on Kaveri river by the great chozha king “Karikaal chozhan” is there for 1900 years and still is very strong. The “Kallanai” was built by the same building methods used for Mullai Periyar Dam, so there is no real threat to the Dam actually. Since the total Kerala is located at the Earth Quake region #3 there is no scientific proof that the dam will be affected by the natural forces. 

Even though, the kerala people who are involved in this issue are very well aware of all these details, but yet they’re making conflicts for their trivial reasons.

Kerala is the neighbour state of Tamilnadu, moreover we were ONE STATE till 1950. Both Tamilians and Malayalees have a common langauge and cultural backgrounds. There are many Tamilians live in kerala and more than that there are many Malayalam people live in Tamilnadu. Both of them live with unity and maintaining a good relationship which we can be proud of. Tamilnadu government as well as the Tamil people never wanted their Kerala brothers and sisters to suffer. Because we know that the Mullai Periyar Dam is 100% safe we are requesting not to build a new dam.

I request the Kerala People, please do not spoil the relationship and respect that is there between the two states’ people for Hundreds of years. Kerala people are well educated and discreet. I really respect them. I hope they will understand the truth and the real situation on the Mullai Periyar issue and provide us the moral support.” - Said Chief Minister J.Jeyalalitha.



To read the same in Tamil --> http://www.dinamalar.com/News_Detail.asp?Id=362833

Friday, December 2, 2011

"எனியோ மோரிகோன்" (Ennio Morricone)

நண்பர்களே, வருகைக்கு நன்றி..

பின்வரும் இசையை முதலில் கேளுங்கள்.




என்ன?? பரிச்சயமானது போல் உள்ளதா?? பல தமிழ் சினிமாக்களில் இந்த இசை அவ்வப்போது சில நொடிகள் வருவதுண்டு. எனக்குத் தெரிந்து சில நகைச்சுவைக் காட்சிகளில் நகைச்சுவை நடிகர் திரையில் தோன்றும் போது இந்த இசை பின்னணியில் ஒலிப்பதுண்டு.

இது ஒரு உலகப்புகழ் பெற்ற இசை. இது "The Good, The Bad and The Ugly" என்ற கௌ-பாய் திரைப்படத்தில் வரும் இசை.

இதன் இசை அமைப்பாளர் "எனியோ மோரிகோன்". 


இந்த பதிவில் ஏற்கனவே நான் கூறியிருந்ததைப் போல, இவரைப் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருந்ததில் அறிந்து கொண்டேன்.

அதிலிருந்து ஒரு ஈர்ப்பு வந்து இவருடைய இசைக் கோர்வைகளை இணையத்தில் தேடிப்பிடித்து கேட்க ஆரம்பித்தேன். மனதை ஆட்கொள்ளும் இசை எனியோ மோரிகோனின் இசை. இவர் பயன்படுத்தியிருப்பவை இசைக் கருவிகளா இல்லை வசியக் கருவிகளா என்று புகழ் பாடும் அளவிற்கு இவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. :)

அதன் பின் ஒரு நாள் இணையத்தில் இருந்து அவருடைய இசைக் கோர்வை அடங்கிய திரட்டு (Bundle) ஒன்றைத் தரவிறக்கம் செய்து கேட்க ஆரம்பித்தேன். அந்த நாட்களில் நான் திரைப்படப் பாடல்கள் கேட்பதைக் கூட மறந்து போனேன். பின் அவரைப்பற்றி இணையத்தில் படிக்க ஆரம்பித்தேன். 1928 -ல் பிறந்தவர் இன்னும் உலக நாடுகளில் இசைக் கச்சேரிகள் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதில் இசை மீது அவர் வைத்திருக்கும் அளவிலடங்கா பற்று தெரிகிறது.

இன்றைய காலகட்டத்தில் Britney Spears, Jenniper Lopez, Eminem, Rihanna போன்றவர்கள் ஓரிரு பாடல்களிலேயே உலகம் முழுவதும் பிரபலம் ஆகிவிடுகிறார்கள். ஆனால் அவர்களை விட பல வருடங்களாக இசைக் கலையில் பங்காற்றிக் கொண்டிருக்கும் எனியோ மோரிகோன்-ஐ நம்மில் ஒரு சிலருக்கும் மட்டுமே தெரிந்திருக்கிறது என்பது என்னுடைய தனிப்பட்ட வருத்தம். :(


திரைப்படத் துறையில் இவருடைய மிகச் சிறந்த இசையினை அழகாக பயன்படுத்தியிருப்பவர் இவருடைய பள்ளித் தோழனான செர்ஜியோ லியோனி. செர்ஜியோ லியோனியின் கௌ-பாய் படங்கள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதற்கு முக்கிய காரணங்களில் எனியோ மோரிகோனின் இசையும் ஒன்று. அவருடைய இயக்கமும், இவருடைய இசையும் பிரித்துப்பார்க்க முடியாத அளவிற்கு இருவரது உழைப்பும் அத்தனைக் காட்சிகளிலும் இருக்கும்.


எனக்கு மிகவும் பிடித்த இவரது இன்னொரு இசைக்கோர்வை இதோ...
கிளின்ட் ஈஸ்ட்வுட் நடித்த "For a Few Dollars More"  படத்திலிருந்து:





எனியோ மோரிகோன் மற்றும் செர்ஜியோ லியோனி கூட்டணியில் வந்த ஏழு திரைப்படங்களில் அனேக திரைப்படங்களை இதுவரை தேடிப்பிடித்து பார்த்து விட்டேன்.

அவை: The Good, The Bad and The Ugly, For a few dollars more, A fistful of dollars, A fistful of dynamite, Once upon a time in America, Once upon a time in the west . இவை அனைத்திலும் காட்சிகளின் பின்னணியில் வரும் இசையும், இசைக் கோர்வைகளும் மிகவும் அருமையாய் இருக்கும்.

இந்தத் திரைப்படங்களின் மூலம் நான் எனியோ மோரிகோன் மற்றும் செர்ஜியோ லியோனி இருவருக்கும் ரசிகனாகி விட்டேன். கடந்த இரண்டு வருடங்களாக பெங்களூரில் நான் தனியாக வசித்து வந்தேன். என் தனிமை நேரங்களில் பெரும்பாலும் இரவுகளில் விளக்கை அனைத்து விட்டு அந்த நிசப்தமான அறையில் எனியோ மோரிகோனின் ரம்மியமான இசையை ஒலிக்கச் செய்து அது என் அறையெங்கும் கசிந்து செல்வதைப் பல முறை உணர்ந்திருக்கிறேன்.


"Once upon a time in the west " திரைப்படத்தின் முதல் காட்சி முழுக்க முழுக்க எனியோ மோரிகோனின் இசையால் உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு புகைவண்டி நிலையத்தில் ஆரம்பிக்கும் இந்தக் காட்சியில் ஒவ்வொரு சின்னச் சின்ன ஒலியும் கூட அருமையாக அமைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக தொடக்கத்தில் அந்த புகைவண்டி நிலையத்தில் பணியாற்றும் பெரியவர் தகவல் பலகையில் எழுதும் போது சறுக்கும் சுண்ணாம்புக்கட்டியின் "க்ருக்" எனும் சின்ன கீறல் சத்தம், கௌ-பாய் ஒருவரின் முகத்திற்கு முன் வந்து வட்டமடிக்கும் ஈயின் ரீங்காரம் அனைத்தும் அருமை. முதல் பத்து நிமிடங்களுக்கு எனியோ மோரிகோனின் இசை மட்டுமே நம்மை திரைக்குள் இழுத்துச் செல்லும்.

அந்தக் காட்சி உங்களுக்காக இதோ:





நீங்களும் எனியோ மோரிகோனின் இசையை விரும்பியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவரது இன்னும் சில இசைக் கோர்வைகளை நீங்களும் இணையத்தில் நிச்சயம் தேடிப் பாருங்கள்.

அவரைப் பற்றிய இன்னொரு பதிவும் நமது தேநீர் நிமிடங்களில், விரைவில்.. அதில் உங்களையும் ஒரு எனியோ மோரிகோனின் ரசிகனாக சந்திக்கிறேன் :)

நன்றி.!!

Thursday, December 1, 2011

ஒரு விளம்பரம்.!!



நான் எங்கள் அலுவலகத்தின் 'ஊழியர் ஒருங்கிணைப்புக் குழு'-வின்(Employee Engagement Team) ஒரு உறுப்பினர். எங்கள் அலுவலகத்தில் சென்ற மாதம் ஒரு 'கண் பரிசோதனை நிகழ்வு' நடத்தப்பட்டது. அதற்கான மின்னஞ்சல் விளம்பரம் வடிவமைக்க எங்களில் சிலரைக் கேட்டுக்கொண்டார்கள்.

அதில் நானும் பங்கேற்றியிருந்தேன். நான் முதலில் வடிவமைத்த விளம்பரம் இதோ:




ஏற்கனவே இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் விநாயகரை வைத்து ஒரு விளம்பரம் உண்டு. அதில் விநாயகர் "என்னைப் போல் யாரும் மாற்றுத் தலை பெறுவதில்லை, ஆகையால் தலைக்கவசம் அணியுங்கள்" என்று கூறுவது போல் இருக்கும். நான் அதே போல் ஒரு கருத்தை இதில் பயன்படுத்தினேன்.

இந்தப்படம் எங்கள் குழுவினருக்கு மிகவும் பிடித்திருந்தது. அனால் இந்தப் படத்தில் சிவன் இருப்பதால் 'மதம்'சார்பான கருத்துக்கள் எழ வாய்ப்புண்டு எனக் கருதினார்கள். அதன் பிறகு சிறிது நேரம் யோசித்து பின்வரும் படத்தினை வடிவமைத்து அவர்களுக்குக் கொடுத்தேன். புதிய வடிவு நன்றாக இருக்கிறதெனக் கூறி அதையே பயன்படுத்திக் கொண்டார்கள். :)

அந்த புதிய படம் இதோ:






Wednesday, November 30, 2011

கணினியின் வேலைத் திறனைக் கூட்ட ஒரு வழி..







நமது கணணிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக RAM ஒன்றை பொறுத்துவதனால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. அதேவேளை பென்டிரைவ்களின் விலை குறைவானதே.





முதலில் Windows Xp யில் எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தி கணணியின் performanceயை அதிகரிக்கலாம்.
முதலில் பென்டிரைவ் ஒன்றை(குறைந்தது 1GB) USB port வழியாக பொறுத்துங்கள்.
1. பின் My Computer ல் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
2. அதிலுள்ள Advanced பகுதியில் Performance இல் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள்.
3. அதன் பின் தோன்றும் வின்டோவில் Advanced பகுதியில் Change பொத்தானை Click செய்து பென்டிரைவ்வை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
4. பின் Custom Size என்பதை Click செய்து பயன்படுத்த வேண்டிய அளவை டைப் செய்யுங்கள். (Initial மற்றும் Max எனும் இரு பிரிவிலும் ஒரே அளவை வழங்குங்கள்).
5. பின்னர் Set செய்து உங்கள் கணணியை Restart செய்யுங்கள் அல்லது ReadyBoost அல்லது eboostr மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின் பென்டிரைவ்வை பொறுத்தி eboostr control pannel இல் பென்டிரைவ்வை add செய்து பயன்படுத்தலாம். (Restart செய்தல் கட்டாயமானதே)
6. Windows 7 யில் பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தலாம். உங்கள் கணணி 256GB RAM கொண்டிருந்தால் 8 ReadyBoost Devices களை ஒவ்வொன்றும் 32GB கொள்ளவை உடை பென்டிரைவ்களாக பயன்படுத்தலாம். எனவே Windows 7 இல் மொத்தமாக 256GB RAM வரைக்கும் பயன்படுத்தலாம்.
உங்கள் பென்டிரைவ்வில் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள். அதில் ReadyBoost பகுதியில் Use This Device தெரிவு செய்யுங்கள். Space to reserve for system speed என்ற இடத்தில் கூட்டி விடவும். இப்போது Apply செய்து விடுங்கள், உங்கள் பென்டிரைவ்வின் Performance உயர்ந்துவிடும்