நண்பர்களே, வருகைக்கு நன்றி..
பின்வரும் இசையை முதலில் கேளுங்கள்.
என்ன?? பரிச்சயமானது போல் உள்ளதா?? பல தமிழ் சினிமாக்களில் இந்த இசை அவ்வப்போது சில நொடிகள் வருவதுண்டு. எனக்குத் தெரிந்து சில நகைச்சுவைக் காட்சிகளில் நகைச்சுவை நடிகர் திரையில் தோன்றும் போது இந்த இசை பின்னணியில் ஒலிப்பதுண்டு.
இது ஒரு உலகப்புகழ் பெற்ற இசை. இது "The Good, The Bad and The Ugly" என்ற கௌ-பாய் திரைப்படத்தில் வரும் இசை.
இதன் இசை அமைப்பாளர் "எனியோ மோரிகோன்".
இந்த பதிவில் ஏற்கனவே நான் கூறியிருந்ததைப் போல, இவரைப் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருந்ததில் அறிந்து கொண்டேன்.
அதிலிருந்து ஒரு ஈர்ப்பு வந்து இவருடைய இசைக் கோர்வைகளை இணையத்தில் தேடிப்பிடித்து கேட்க ஆரம்பித்தேன். மனதை ஆட்கொள்ளும் இசை எனியோ மோரிகோனின் இசை. இவர் பயன்படுத்தியிருப்பவை இசைக் கருவிகளா இல்லை வசியக் கருவிகளா என்று புகழ் பாடும் அளவிற்கு இவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. :)
அதன் பின் ஒரு நாள் இணையத்தில் இருந்து அவருடைய இசைக் கோர்வை அடங்கிய திரட்டு (Bundle) ஒன்றைத் தரவிறக்கம் செய்து கேட்க ஆரம்பித்தேன். அந்த நாட்களில் நான் திரைப்படப் பாடல்கள் கேட்பதைக் கூட மறந்து போனேன். பின் அவரைப்பற்றி இணையத்தில் படிக்க ஆரம்பித்தேன். 1928 -ல் பிறந்தவர் இன்னும் உலக நாடுகளில் இசைக் கச்சேரிகள் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதில் இசை மீது அவர் வைத்திருக்கும் அளவிலடங்கா பற்று தெரிகிறது.
இன்றைய காலகட்டத்தில் Britney Spears, Jenniper Lopez, Eminem, Rihanna போன்றவர்கள் ஓரிரு பாடல்களிலேயே உலகம் முழுவதும் பிரபலம் ஆகிவிடுகிறார்கள். ஆனால் அவர்களை விட பல வருடங்களாக இசைக் கலையில் பங்காற்றிக் கொண்டிருக்கும் எனியோ மோரிகோன்-ஐ நம்மில் ஒரு சிலருக்கும் மட்டுமே தெரிந்திருக்கிறது என்பது என்னுடைய தனிப்பட்ட வருத்தம். :(
திரைப்படத் துறையில் இவருடைய மிகச் சிறந்த இசையினை அழகாக பயன்படுத்தியிருப்பவர் இவருடைய பள்ளித் தோழனான செர்ஜியோ லியோனி. செர்ஜியோ லியோனியின் கௌ-பாய் படங்கள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதற்கு முக்கிய காரணங்களில் எனியோ மோரிகோனின் இசையும் ஒன்று. அவருடைய இயக்கமும், இவருடைய இசையும் பிரித்துப்பார்க்க முடியாத அளவிற்கு இருவரது உழைப்பும் அத்தனைக் காட்சிகளிலும் இருக்கும்.
எனக்கு மிகவும் பிடித்த இவரது இன்னொரு இசைக்கோர்வை இதோ...
கிளின்ட் ஈஸ்ட்வுட் நடித்த "For a Few Dollars More" படத்திலிருந்து:
இந்தத் திரைப்படங்களின் மூலம் நான் எனியோ மோரிகோன் மற்றும் செர்ஜியோ லியோனி இருவருக்கும் ரசிகனாகி விட்டேன். கடந்த இரண்டு வருடங்களாக பெங்களூரில் நான் தனியாக வசித்து வந்தேன். என் தனிமை நேரங்களில் பெரும்பாலும் இரவுகளில் விளக்கை அனைத்து விட்டு அந்த நிசப்தமான அறையில் எனியோ மோரிகோனின் ரம்மியமான இசையை ஒலிக்கச் செய்து அது என் அறையெங்கும் கசிந்து செல்வதைப் பல முறை உணர்ந்திருக்கிறேன்.
நீங்களும் எனியோ மோரிகோனின் இசையை விரும்பியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவரது இன்னும் சில இசைக் கோர்வைகளை நீங்களும் இணையத்தில் நிச்சயம் தேடிப் பாருங்கள்.
அவரைப் பற்றிய இன்னொரு பதிவும் நமது தேநீர் நிமிடங்களில், விரைவில்.. அதில் உங்களையும் ஒரு எனியோ மோரிகோனின் ரசிகனாக சந்திக்கிறேன் :)
நன்றி.!!
பின்வரும் இசையை முதலில் கேளுங்கள்.
என்ன?? பரிச்சயமானது போல் உள்ளதா?? பல தமிழ் சினிமாக்களில் இந்த இசை அவ்வப்போது சில நொடிகள் வருவதுண்டு. எனக்குத் தெரிந்து சில நகைச்சுவைக் காட்சிகளில் நகைச்சுவை நடிகர் திரையில் தோன்றும் போது இந்த இசை பின்னணியில் ஒலிப்பதுண்டு.
இது ஒரு உலகப்புகழ் பெற்ற இசை. இது "The Good, The Bad and The Ugly" என்ற கௌ-பாய் திரைப்படத்தில் வரும் இசை.
இதன் இசை அமைப்பாளர் "எனியோ மோரிகோன்".
இந்த பதிவில் ஏற்கனவே நான் கூறியிருந்ததைப் போல, இவரைப் பற்றி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருந்ததில் அறிந்து கொண்டேன்.
அதிலிருந்து ஒரு ஈர்ப்பு வந்து இவருடைய இசைக் கோர்வைகளை இணையத்தில் தேடிப்பிடித்து கேட்க ஆரம்பித்தேன். மனதை ஆட்கொள்ளும் இசை எனியோ மோரிகோனின் இசை. இவர் பயன்படுத்தியிருப்பவை இசைக் கருவிகளா இல்லை வசியக் கருவிகளா என்று புகழ் பாடும் அளவிற்கு இவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று. :)
அதன் பின் ஒரு நாள் இணையத்தில் இருந்து அவருடைய இசைக் கோர்வை அடங்கிய திரட்டு (Bundle) ஒன்றைத் தரவிறக்கம் செய்து கேட்க ஆரம்பித்தேன். அந்த நாட்களில் நான் திரைப்படப் பாடல்கள் கேட்பதைக் கூட மறந்து போனேன். பின் அவரைப்பற்றி இணையத்தில் படிக்க ஆரம்பித்தேன். 1928 -ல் பிறந்தவர் இன்னும் உலக நாடுகளில் இசைக் கச்சேரிகள் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதில் இசை மீது அவர் வைத்திருக்கும் அளவிலடங்கா பற்று தெரிகிறது.
இன்றைய காலகட்டத்தில் Britney Spears, Jenniper Lopez, Eminem, Rihanna போன்றவர்கள் ஓரிரு பாடல்களிலேயே உலகம் முழுவதும் பிரபலம் ஆகிவிடுகிறார்கள். ஆனால் அவர்களை விட பல வருடங்களாக இசைக் கலையில் பங்காற்றிக் கொண்டிருக்கும் எனியோ மோரிகோன்-ஐ நம்மில் ஒரு சிலருக்கும் மட்டுமே தெரிந்திருக்கிறது என்பது என்னுடைய தனிப்பட்ட வருத்தம். :(
திரைப்படத் துறையில் இவருடைய மிகச் சிறந்த இசையினை அழகாக பயன்படுத்தியிருப்பவர் இவருடைய பள்ளித் தோழனான செர்ஜியோ லியோனி. செர்ஜியோ லியோனியின் கௌ-பாய் படங்கள் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதற்கு முக்கிய காரணங்களில் எனியோ மோரிகோனின் இசையும் ஒன்று. அவருடைய இயக்கமும், இவருடைய இசையும் பிரித்துப்பார்க்க முடியாத அளவிற்கு இருவரது உழைப்பும் அத்தனைக் காட்சிகளிலும் இருக்கும்.
எனக்கு மிகவும் பிடித்த இவரது இன்னொரு இசைக்கோர்வை இதோ...
கிளின்ட் ஈஸ்ட்வுட் நடித்த "For a Few Dollars More" படத்திலிருந்து:
எனியோ மோரிகோன் மற்றும் செர்ஜியோ லியோனி கூட்டணியில் வந்த ஏழு திரைப்படங்களில் அனேக திரைப்படங்களை இதுவரை தேடிப்பிடித்து பார்த்து விட்டேன்.
அவை: The Good, The Bad and The Ugly, For a few dollars more, A fistful of dollars, A fistful of dynamite, Once upon a time in America, Once upon a time in the west . இவை அனைத்திலும் காட்சிகளின் பின்னணியில் வரும் இசையும், இசைக் கோர்வைகளும் மிகவும் அருமையாய் இருக்கும்.
"Once upon a time in the west " திரைப்படத்தின் முதல் காட்சி முழுக்க முழுக்க எனியோ மோரிகோனின் இசையால் உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு புகைவண்டி நிலையத்தில் ஆரம்பிக்கும் இந்தக் காட்சியில் ஒவ்வொரு சின்னச் சின்ன ஒலியும் கூட அருமையாக அமைக்கப்பட்டிருக்கும். உதாரணமாக தொடக்கத்தில் அந்த புகைவண்டி நிலையத்தில் பணியாற்றும் பெரியவர் தகவல் பலகையில் எழுதும் போது சறுக்கும் சுண்ணாம்புக்கட்டியின் "க்ருக்" எனும் சின்ன கீறல் சத்தம், கௌ-பாய் ஒருவரின் முகத்திற்கு முன் வந்து வட்டமடிக்கும் ஈயின் ரீங்காரம் அனைத்தும் அருமை. முதல் பத்து நிமிடங்களுக்கு எனியோ மோரிகோனின் இசை மட்டுமே நம்மை திரைக்குள் இழுத்துச் செல்லும்.
அந்தக் காட்சி உங்களுக்காக இதோ:
நீங்களும் எனியோ மோரிகோனின் இசையை விரும்பியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவரது இன்னும் சில இசைக் கோர்வைகளை நீங்களும் இணையத்தில் நிச்சயம் தேடிப் பாருங்கள்.
அவரைப் பற்றிய இன்னொரு பதிவும் நமது தேநீர் நிமிடங்களில், விரைவில்.. அதில் உங்களையும் ஒரு எனியோ மோரிகோனின் ரசிகனாக சந்திக்கிறேன் :)
நன்றி.!!

No comments:
Post a Comment