நான் எங்கள் அலுவலகத்தின் 'ஊழியர் ஒருங்கிணைப்புக் குழு'-வின்(Employee Engagement Team) ஒரு உறுப்பினர். எங்கள் அலுவலகத்தில் சென்ற மாதம் ஒரு 'கண் பரிசோதனை நிகழ்வு' நடத்தப்பட்டது. அதற்கான மின்னஞ்சல் விளம்பரம் வடிவமைக்க எங்களில் சிலரைக் கேட்டுக்கொண்டார்கள்.
அதில் நானும் பங்கேற்றியிருந்தேன். நான் முதலில் வடிவமைத்த விளம்பரம் இதோ:

ஏற்கனவே இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதின் அவசியத்தை உணர்த்தும் வகையில் விநாயகரை வைத்து ஒரு விளம்பரம் உண்டு. அதில் விநாயகர் "என்னைப் போல் யாரும் மாற்றுத் தலை பெறுவதில்லை, ஆகையால் தலைக்கவசம் அணியுங்கள்" என்று கூறுவது போல் இருக்கும். நான் அதே போல் ஒரு கருத்தை இதில் பயன்படுத்தினேன்.
இந்தப்படம் எங்கள் குழுவினருக்கு மிகவும் பிடித்திருந்தது. அனால் இந்தப் படத்தில் சிவன் இருப்பதால் 'மதம்'சார்பான கருத்துக்கள் எழ வாய்ப்புண்டு எனக் கருதினார்கள். அதன் பிறகு சிறிது நேரம் யோசித்து பின்வரும் படத்தினை வடிவமைத்து அவர்களுக்குக் கொடுத்தேன். புதிய வடிவு நன்றாக இருக்கிறதெனக் கூறி அதையே பயன்படுத்திக் கொண்டார்கள். :)
அந்த புதிய படம் இதோ:


No comments:
Post a Comment