உண்மையாய் நம்பப்படும்
என சொல்லும் பொய்களும்
பொய்யாக இருக்கக்கூடும் என
நம்பப்படும் உண்மைகளும்
நிறைந்ததாய் இருக்கிறது நம் வாழ்க்கை...
நாள் முடிவில் ஏதோ ஒரு நொடியில்
'சொன்னது எதுவாகவும் இருக்கட்டும்’
என மனதை மாற்றிக் கொண்டு உறங்கிப்போகிறோம்.
மறுதினம் வானம் விடியல் கொள்கிறது, நாம் எதிர்கொள்ள
வேண்டிய உண்மைகளையும் பொய்களையும்
இரவு முழுவதும் உதிர்த்து விட்டபடி....
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment