Wednesday, January 25, 2012

தமிழ்ப் பெயர்கள்


”முகநூலில் தலைப்புச் செய்தியாக இந்தத் தகவலை எழுதத் தொடங்கும் போது தான் தோன்றியது, இதை ஏன் ஒரு பதிவாக எழுதக்கூடாது என்று..?!!”

அதன் விளைவு:

இன்று (25-01-2012) காலையில் கலைஞர் தொலைக்காட்சியில் எழுத்தாளர் கழுகூர்.பழனியப்பன் உடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி.. அதில் தமிழ்ப் பெயர்கள் சூட்டுவதைப் பற்றிய ஒரு பேச்சு.. தமிழர்கள் நவீனமாக பெயர் வைக்கிறேன் பேர்வழி என்று அர்த்தம் புரியாமல் தான் பெயர் வைக்கிறார்கள்.. உதாரணத்திற்கு அவர் சொன்ன இரண்டு பெயர்கள்.

சியாமளா - என்றால் கருப்பு என்று பொருள், கருப்பாயி என்பதன் மாற்றுப் பெயர் தான் சியாமளாவாம்..!!!

ஸ்வேதா - சுவேதம் என்றால் வெள்ளையாம்.. வெள்ளையம்மா என்பதன் மாற்றுப் பெயர் தான் ஸ்வேதாவாம்.


ஏகப்பட்ட நல்ல தமிழ்ப் பெயர்கள் உண்டு. எனக்குத் தெரிந்து தமிழ் மொழியில் மட்டும் தான் அந்த மொழியின் பெயரையே மக்களுக்கு சூட்டும் வழக்கமும், வாய்ப்பும் உண்டு.

தமிழ் என்று ஆண்,பெண் இரு குழந்தைகளுக்கும் பெயர் சூட்டலாம்..
தமிழரசி, தமிழரசன், தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி, தமிழன்பன், தமிழ்க்கதிர், தமிழ்நாடன், தமிழ்நேயன்,தமிழ்வண்ணன், தமிழ்க்கொடி, தமிழ்வாணன், தமிழ்மகன்,தமிழ்மகள்,தமிழ்ச்சுடர்,தமிழ்மணி, இன்னும் பற்பலப் பெயர்கள் உள்ளன.

இணையத்தில் தேடினால் நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெயர்களைக் கண்டுபிடிக்க முடியும். என்னுடைய சில நண்பர்கள் தங்களது பிள்ளைகளின் பெயர்களைக் கூறும் போது புரியாமல் இரண்டு அல்லது மூன்று முறை கூட அவர்களைக் கேட்டிருக்கிறேன். கேட்டால் நட்சத்திரம், பிறந்த தேதிப் படி வைத்தார்களாம். எண் கணித முறைப்படி பெயர்களில் சில எழுத்துக்களை மாற்றிச் சொல்லி வருவாய் பார்க்கும் சில எண் கணித மேதைகள் (?!!) சில தொலைக்காட்சிகளில் நடத்தும் நிகழ்ச்சிகள் கூட இங்கு பிரபலம்.

இப்படிப் பெயர் மாற்றுவதினால் வருவதில்லை வாழ்க்கை, நல்ல எண்ணங்களிலும், நமது மொழிக்கும், இனத்திற்கும் கொடுக்கும் மரியாதையில் தான் நல்ல வாழ்க்கை உண்டு என்பதை நாம் சீக்கிரம் உணர வேண்டும்.

நாம் இனிமேல் நம்முடைய பெயர்களைத் தமிழில் மாற்ற முடியாது, நம் சந்ததிகளின் பெயர்களாவது இனி தமிழில் இருக்கட்டும்.

பல ஆயிரக்கணக்கான வருடங்களாக வாழ்ந்து வரும், நம்மை வாழ வைக்கும் நம் தமிழ் மொழியில் இல்லாத பெயர்களும், அர்த்தங்களுமா மற்ற மொழிகளில் இருக்கப் போகின்றன்..???

சிந்தியுங்கள் தமிழரே..!!

இணையத்தில் நான் படித்த கூடுதல் தகவல்: 
தமிழ்ப் பெயர் வைக்கும் வழக்கம் மட்டும் அல்ல, தலைவர்கள் / புகழ் பெற்றவர்கள், குடும்பத்தில் முன்னோர்கள் பெயர் சூட்டும் வழக்கமும் அரிதாகி வருகிறது. பேரன், பேத்தி என்ற சொல்லே பெயரன் (தாத்தாவின் பெயரைக் கொண்டவன்), பெயர்த்தி என்பதால் வந்தது தான்!!

No comments:

Post a Comment